மும்பையில் ரூ.1,400 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்


மும்பையில் ரூ.1,400 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்
x

மும்பையில் ரூ.1,400 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை,

மும்பையில் மெபெட்ரோன் எனப்படும் செக்ஸ் உணர்வை தூண்டும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1,400 கோடி எனக்கூறியுள்ள அதிகாரிகள் அது தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், " மும்பையில் உள்ள குற்றப்பிரிவு போலீசாரின் கீழ் செயல்படும் போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு போதைப்பொருள் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து பல்ஹர் மாவட்டத்தில் உள்ள நலசோபரா பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் சோதனை நடத்தப்பட்டது. இதில், மெபெட்ரோன் மற்றும் தடை செய்யப்பட்ட 703 கிலோ எடை கொண்ட போதைப்பொள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.1,400 கோடி இருக்கும். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றனர்.


Next Story