மும்பை- குடியிருப்பு கட்டிடத்தில் திடீர் தீ விபத்து..!
தீ விபத்தில் இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என மும்பை தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
மும்பை,
மும்பை,லோக்மான்ய திலக் டெர்மினலுக்கு அருகில் உள்ள நியூ திலக் நகர் பகுதியில் குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர் .
கட்டிடத்தில் ஏற்பட்ட தீ 2-வது நிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தீ விபத்தில் இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என மும்பை தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story