செல்போன் பயன்படுத்த அனுமதிக்காததால் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து 15 வயது சிறுமி தற்கொலை
செல்போன் பயன்படுத்த பெற்றோர் அனுமதிக்காததால் 15 வயது வயது சிறுமி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையின் மல்வானி பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அந்த தம்பதிக்கு 15 வயது சிறுமி உள்பட 4 பிள்ளைகள் உள்ளனர்.
இதனிடையே, 15 வயதான அந்த சிறுமி 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். அந்த சிறுமி அதிக நேரம் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். சமூகவலைதளத்தில் அதிக நேரம் செலவிட்டுள்ளார்.
இதனால், சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் சிறுமியை கண்டித்து செல்போனை பறித்துக்கொண்டனர். செல்போன் பயன்படுத்த அனுமதிக்காததால் மன உளைச்சலடைந்த சிறுமி கடந்த சனிக்கிழமை தான் வசிக்கும் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story