மாநகராட்சி குப்பை லாரி மோதி பெண் பரிதாப சாவு
மாநகராட்சி குப்பை லாரி மோதி பெண் பலியானார்.
பெங்களூரு: பெங்களூருவில் அதிவேகமாக செல்லும் மாநகராட்சி குப்பை லாரி மோதி பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. கடந்த 3 மாதத்தில் மட்டும் பள்ளி மாணவி உள்பட 4 பேர் குப்பை லாரி மோதி உயிரிழந்தனர். இந்த நிலையில் குப்பை லாரி மோதி மேலும் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. அதுபற்றி விவரம் வருமாறு :- பெங்களூரு பேடராயனபுர போக்குவரத்து போலீஸ் உட்பட்ட பகுதியில் நேற்று இரவு ஒரு பெண் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மாநகராட்சி குப்பை லாரி பெண் மீது மோதியது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அந்த பெண்ணின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணின் பெயர் விவரம் தெரியவில்லை.
Related Tags :
Next Story