கழுத்தை அறுத்து கணவர் கொலை; பெண் கைது தற்கொலை செய்ததாக நாடகமாடியது அம்பலம்


கழுத்தை அறுத்து கணவர் கொலை; பெண் கைது  தற்கொலை செய்ததாக நாடகமாடியது அம்பலம்
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மலவள்ளி டவுனில் நடத்தையில் சந்தேகப்பட்டதால் காதல் கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மண்டியா:

நடத்தையில் சந்தேகம்

மண்டியா மாவட்டம் மலவள்ளி டவுன் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி நாகம்மா. இவர்கள் இருவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நாகம்மா தனியார் கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவர் அடிக்கடி யாரிடமோ செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த கணவர் சசிகுமார், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த நிைலயில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மனைவியை வேலைக்கு செல்லவேண்டாம் என்று சசிகுமார் கூறியுள்ளார். இதனால் நாகம்மா வீட்டிலேயே இருந்தார்.

கொலை

இதன்காரணமாக ஆத்திரத்தில் இருந்த நாகம்மா, கணவர் என்றும் பாராமல் நேற்று சசிகுமாரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். மேலும் கணவர் தற்கொலை செய்து கொண்டாக நாகம்மா, குடும்பத்தினரிடம் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே மலவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது கணவன் குடிபோதையில் வந்து தன்னிடம் தகராறில் ஈடுபட்டதாகவும், மகள் மற்றும் எனது கை, கால்களை கட்டிபோட்டு கத்தியால் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் கூறினார். இதற்கு சசிகுமார் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர். மனைவியே கொலை செய்துவிட்டு, நாடகமாடுவதாக கூறினார்.

கைது

இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் நாகம்மாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது நாகம்மா, கணவன் தன்னுடைய நடத்தையின் மீது சந்தேகம் அடைந்ததால் கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றதாக கூறினார்.

இதையடுத்து நாகம்மாவை கைது செய்த போலீசார் சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மலவள்ளி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது.


Next Story