சிவசேனா கூட்டணி மக்கள் நம்பிக்கையை பெறுவதை பாஜகவால் சகித்துக்கொள்ள முடியவில்லை - காங்கிரஸ்


சிவசேனா கூட்டணி மக்கள் நம்பிக்கையை பெறுவதை பாஜகவால் சகித்துக்கொள்ள முடியவில்லை - காங்கிரஸ்
x
தினத்தந்தி 24 Jun 2022 10:12 AM GMT (Updated: 24 Jun 2022 10:18 AM GMT)

மகாவிகாஸ் அகாடி அரசு மக்களின் நம்பிக்கையை பெறுவதை பாஜகவால் சகித்துக்கொள்ளமுடியவில்லை என்று காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

மராட்டியத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, சிவசேனா கட்சியை மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே மராட்டிய மகாவிகாஸ் அகாடி அரசுக்கு எதிராக திரும்பியுள்ளார். அவர் தனது ஆதரவாளர்களான 50 எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓரு ஓட்டலில் தங்கியுள்ளார். இதில், 40 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், மராட்டிய அரசியல் குழப்பம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுதிரி கூறுகையில், மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவியேற்றது முதல் அவரை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு தங்களிடம் உள்ள அனைத்து சக்திகளையும் பாஜக முயற்சித்து வருகிறது. மகாவிகாஸ் அகாடி அரசு மெல்ல மக்களின் நம்பிக்கையை பெற்றுவருகிறது. ஆனால், அதை பாஜகவால் சகித்துக்கொள்ளமுடியவில்லை' என்றார்.


Next Story