டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் சிக்கியது எப்படி? உயிர் பிழைத்தவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு


டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் சிக்கியது எப்படி? உயிர் பிழைத்தவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு
x
தினத்தந்தி 5 Nov 2022 4:30 AM IST (Updated: 5 Nov 2022 4:30 AM IST)
t-max-icont-min-icon

சைரஸ் மிஸ்திரி கடந்த செப்டம்பர் மாதம் 4-ந் தேதி நண்பர்களுடன் குஜராத்தில் இருந்து மும்பைக்கு சொகுசு காரில் வந்தார்.

மும்பை,

டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கடந்த செப்டம்பர் மாதம் 4-ந் தேதி நண்பர்களுடன் குஜராத்தில் இருந்து மும்பைக்கு சொகுசு காரில் வந்தார். இதில் பால்கர் பகுதியில் வந்த கார், சூர்யா ஆற்றுப்பால தடுப்பு சுவரில் மோதி பயங்கர விபத்தில் சிக்கியது. விபத்தில் சைரஸ் மிஸ்திரி, அவரது நண்பர் ஜகாங்கிர் பலியானார்கள்.இந்த விபத்தின்போது காரை ஓட்டிய பெண் டாக்டர் அனகிதா (வயது 55) மற்றும் அவரது கணவரும், சைரஸ் மிஸ்திரியின் நண்பருமான டேரியல் பந்தோலே ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இந்தநிலையில் போலீசார் விபத்து குறித்து டேரியல் பந்தோலேயிடம் வாக்குமூலத்தை பெற்றனர். அவரின் வீட்டில் வைத்து சுமார் ஒற்றரை மணி நேரம் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அப்போது விபத்து சம்பவம் குறித்து அவரால் முழுமையாக நினைவு கூற முடியவில்லை என தெரிகிறது. இருப்பினும் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

சம்பவத்தன்று எனது மனைவி அனகிதா காரை ஓட்டி சென்றார். அப்போது நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற கார் சாலையின் 3-வது பாதையில் இருந்து 2-வது பாதை வழியாக செல்ல முயன்றது. அந்த காரை பின்தொடர்ந்து அனகிதா காரை ஓட்டினார். ஆனால் முன்னால் லாரி ஒன்றை கண்டார். இதனால் அவரால் 2-வது பாதையில் செல்ல முடியவில்லை. எங்களது கார் சென்ற 3-வது பாதை குறுகி கொண்டே சென்றதால் ஆற்றுப்பாலத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story