மைசூர் பாகு, மசாலா தோசை சாப்பிட்டார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி மைசூர் பாகு, மசாலா தோசை சாப்பிட்டார்.
மைசூரு: மைசூருவில் நடந்த 8-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவர் மைசூரு வருகிறபோது, அரண்மனையில் காலை விருந்துக்கு வர வேண்டும் என்று ராஜமாதா பிரமோதா தேவி உடையார் அழைப்பு விடுத்திருந்தார். இது தொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அதை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். இன்று அவர் அரண்மனையில் அரச குடும்பத்தினருடன் காலை விருந்து சாப்பிட்டார். இந்த விருந்தில் அறுசுவை சைவ உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த உணவில் புகழ்பெற்ற மைசூர் பாகு, மைசூர் மசால் தோசை பரிமாறப்பட்டன. அவற்றை பிரதமர் மோடி ருசித்து சாப்பிட்டார். இந்த விருந்துக்கான ஏற்பாடுகளை அரண்மனை வாரிசு யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ உடையார் மற்றும் ராஜமாதா பிரமோதா தேவி உடையார் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story