கோர்ட்டில் அமைத்த தற்காலிக சிறையில் சுரங்கம் அமைத்த மர்ம நபர்கள்; போலீசார் அதிர்ச்சி


கோர்ட்டில் அமைத்த தற்காலிக சிறையில் சுரங்கம் அமைத்த மர்ம நபர்கள்; போலீசார் அதிர்ச்சி
x

ராஜஸ்தானில் கோர்ட்டு ஒன்றில் அமைக்கப்பட்ட தற்காலிக சிறையில் சுரங்கம் அமைத்தது பற்றி கண்டறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.



ஜெய்ப்பூர்,


ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் பானி பார்க் பகுதியில் செசன்ஸ் கோர்ட்டு ஒன்று உள்ளது. அதில், தற்காலிக சிறை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அந்த சிறையில் சுரங்க பாதை அமைத்து உள்ளனர்.

இதன் வழியே சிறை கைதிகள் தப்பி செல்ல வழிவகை செய்யப்பட்டு இருந்தது. எனினும் போலீஸ் கான்ஸ்டபிள்களான பரம் சுக் மற்றும் தினேஷ் ஆகியோர் இதனை கண்டுபிடித்தனர்.

சரியான நேரத்தில் அவர்கள் உடனடியாக மற்ற போலீசாருக்கு தகவல் தெரிவித்து பெரிய சம்பவம் எதுவும் நடைபெறாமல் தடுத்துள்ளனர். விசாரணை கைதிகள் அல்லது குற்றவாளிகள் யாரேனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

வெவ்வேறு சிறைகளில் இருந்து விசாரணைக்காக அழைத்து வரப்படும் கைதிகள், கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு இந்த தற்காலிக சிறையில் தங்க வைக்கப்படுகின்றனர்.

அவர்களில் சிலர் கோர்ட்டில் இருந்தபடி தப்பி செல்ல திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story