பெங்களூருவில் 243 வார்டுகளிலும் நம்ம கிளினிக் திட்டம்
பெங்களூருவில் 243 வார்டுகளிலும் நம்ம கிளினிக் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் 243 வார்டுகளிலும் நம்ம கிளினிக் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பிறந்தநாளைெயாட்டி பெங்களூரு மருத்துவ கல்லூரியில் நேற்று இலவச மருத்துவம் மற்றும் ரத்த தான முகாம் நடந்தது. இந்த முகாைம சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் ெதாடங்கிைவத்து பேசியதாவது:-
விரைவில் தி்ட்டம் தொடக்கம்
பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நம்ம கிளினிக் திட்டம் தொடங்க வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு செய்தார். இதுபற்றி கடந்த பட்ஜெட்டில் அவர் அறிவித்ததுடன், அதற்கான நிதியையும் ஒதுக்கி இருக்கிறார். அதன்படி, பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 243 வார்டுகளிலும் கூடிய விரைவில் நம்ம கிளினிக் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
பெங்களூருவில் நம்ம கிளினிக்கின் சாதகம் மற்றும் பாதகங்களை அறிந்து கொண்டு, அதன்பிறகு இந்த திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும். மாநிலம் முழுவதும் 438 நம்ம கிளினிக்களை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நம்ம கிளினிக் திட்டம் மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும்.
இலவசமாக மருந்துகள்
நம்ம கிளினிக் தினமும் காலை 9 மணியில் இருந்து மாலை 4.30 மணிவரை திறந்திருக்கும். அங்கு ஒரு டாக்டர், ஒரு நர்சு, ஒரு லேப் டெக்னிசியன் மற்றும் ஒரு டி.குரூப் ஊழியர் அங்கு வேலை செய்வர். நம்ம கிளினிக்கில் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பதுடன், இலவசமாக மருந்துகளும் வழங்கப்படும். நம்ம கிளினிக்கில் 12 வகையான ஆரோக்கிய சேவைகள் மற்றும் நோயாளிகளுக்கு 14 வகையான பரிேசாதனை-ஆய்வுகளும் நடத்தப்படும்.
இது முழுக்க முழுக்க மாநில அரசின் நிதி உதவியுடன் செயல்படும். ஒரு நம்ம கிளினிக்காக ரூ.36 லட்சம் வழங்கப்படும். இதன்மூலம் நம்ம கிளினிக்கில் மருந்துகள் வாங்குவது, கட்டிடத்திற்கு வாடகை கொடுப்பது உள்ளிட்ட செலவுகளை செய்து கொள்ள அனுமதிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.