'நானோ டி.ஏ.பி. உரம் அறிமுகம்; விவசாயிகளின் வாழ்க்கையை எளிமைப்படுத்தும் நடவடிக்கை' - பிரதமர் மோடி


நானோ டி.ஏ.பி. உரம் அறிமுகம்; விவசாயிகளின் வாழ்க்கையை எளிமைப்படுத்தும் நடவடிக்கை - பிரதமர் மோடி
x

நானோ டி.ஏ.பி. உரம் அறிமுகத்துக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நானோ திரவ டி.ஏ.பி. உரம், சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். உரத்தில் தற்சார்பு நிலையை அடைய இது பெரிய நடவடிக்கை என்று அவர் கூறினார்.

அதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது, விவசாயிகளின் வாழ்க்கையை எளிமைப்படுத்துவதை நோக்கிய முக்கியமான நடவடிக்கை என்று அவர் கூறியுள்ளார்.


Next Story