ஏரிகள் ஆக்கிரமிப்புகளை மீட்க தவறிய பெங்களூரு மாநகராட்சிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீசு
ஏரிகள் ஆக்கிரமிப்புகளை மீட்க தவறிய பெங்களூரு மாநகராட்சிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீசு அனுப்பி உள்ளது.
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ஏரிகள் ஆக்கிரமிப்புகள் குறித்தும், அவற்றை மீட்க பெங்களூரு மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்கவும் 106 தினங்கள் கால அவகாசம் வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவின்பேரில் மாநகராட்சி என்ஜினீயர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஏரிகளில், நேரில் சென்று அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுதொடர்பான அறிக்கையை ஒரு மாதத்திற்குள் பெங்களூரு மாநகராட்சி ஐகோர்ட்டில் ஒப்படைக்கவும் கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஏரிகள் ஆக்கிரமிப்பு மற்றும் அவற்றை மீட்க தவறிய காரணம் குறித்தும் பெங்களூரு மாநகராட்சிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீசு அனுப்பி உள்ளது. மேலும், அந்த பணிகளில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளது.
Related Tags :
Next Story