தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி


தேசியவாத காங்கிரஸ் கட்சி  தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி
x

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும் ,மராட்டிய முன்னாள் மாநில முதல்-மந்திரியுமான சரத் பவார் , உடல்நலக் குறைபாடு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருந்தாலும் தலைவர் சரத் பவார் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் வருகிற நவம்பர் 2 ஆம் தேதி அவர் டிஸ்ஜார்ஜ் செய்யப்படுவார் என்றும் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 4, 5 தேதிகளில் ஷீரடியில் நடைபெறும் கட்சியின் முகாம்களில் அவர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

81 வயதாகும் சரத்பாவருக்கு கடந்த ஆண்டு பித்தப்பை பிரச்சினை இருப்பதாக கண்டறியப்பட்டு , 15 நாட்கள் தொடர் மருத்துவமனை கண்காணிப்பிற்கு பிறகு பித்தப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story