கோழி கூண்டிற்குள் பதுங்கிய நாகபாம்பு பிடிபட்டது


கோழி கூண்டிற்குள் பதுங்கிய நாகபாம்பு பிடிபட்டது
x

கோழி கூண்டிற்குள் பதுங்கிய நாகபாம்பு பிடிபட்டது.

பெங்களூரு: துமகூரு அருகே கோரா கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் விவசாயி ஆவார். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டில் உள்ள கோழி கூண்டை திறந்தார். அப்போது கோழி கூண்டிற்குள் பெரிய பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி உடனடியாக பாம்புபிடி வீரரான திலீப் என்பவருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற திலீப், கோழி கூண்டிற்குள் பதுங்கி இருந்த ராட்சத நாகபாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்த நாகபாம்பை காட்டிற்குள் கொண்டு சென்று விட்டார்.



Next Story