கடூா் அருகே கனமழைக்கு 6 வீடுகள் இடிந்து விழுந்தன


கடூா் அருகே கனமழைக்கு 6 வீடுகள் இடிந்து விழுந்தன
x
தினத்தந்தி 18 Oct 2022 12:30 AM IST (Updated: 18 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

கடூர் அருகே கொட்டி தீா்த்த கனமழையினால் 6 வீடுகளிள் சுவர்கள் இடிந்து விழுந்தது. இதில் குடும்பத்தினர் அதிர்ஷ்டவமாக உயிர்தப்பினர்.

சிக்கமகளூரு;

கனமழை

கா்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீா்த்து வருகிறது. இந்த மழை தலைநகர் பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. மேலும் கா்நாடகத்தின் மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, சிவமொக்கா, குடகு போன்ற பகுதிகளிலும், கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

பகல் நேரங்களில் வெயில் அடித்தாலும், மாலை நேரங்களில் மழை பெய்ய தொடங்கி விடிய விடிய பெய்து வருகிறது. இதனால் மக்கள் ெபரும் அளவு அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

6 வீடுகளின் சுவர்கள் இடிந்தது

இந்த நிலையில் மலைநாடு மாவட்டமான சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள கடூர் தாலுகா ஒன்னேஹள்ளி கிராமத்தில் நேற்றுமுன்தினம் இடைவிடாது பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியது.

இந்த மழைக்கு அந்த பகுதியை சேர்ந்த ஹாளப்பா, ஈரம்மா, மல்லிகார்ஜூனா, ராஜப்பா, உள்பட மேலும் 2 பேர் என மொத்தம் 6 பேருடைய வீடுகளின் சுவர்கள் மழைநீரில் நனைத்து இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் இருந்தவா்கள் சூதாரித்து கொண்டு வெளியில் வந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இதனால் அவர்கள் வீடுகளில் தங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பஞ்சாயத்து அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டனர்.

நிவாரணம்

அவர்களிடம் வீடுகளை இழந்தவர்கள் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அரசிடம் இருந்து நிவாரணம் பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் அவர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு வீடுகள் இல்லாமல் தவித்து வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

மேலும் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். தற்போது அவர்கள் தங்களுடைய உறவினர்கள் வீடுகளிலும், பள்ளி கட்டிங்களிலும் தங்கி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சாலைகளின் ஓரிரு இடங்களில் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. மேலும் அந்த பகுதியில் மண்சரிவு ஏற்பட வாய்புள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.


Next Story