பொன்னம்பேட்டை அருகே தேக்கு மரங்களை கடத்திய சரக்கு வாகனம் விபத்தில் சிக்கியது தப்பியோடிய ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு


பொன்னம்பேட்டை அருகே தேக்கு மரங்களை கடத்திய சரக்கு வாகனம் விபத்தில் சிக்கியது தப்பியோடிய ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Jun 2023 12:15 AM IST (Updated: 13 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொன்னம்பேட்டை அருகே தேக்கு மரங்களை வெட்டி கடத்திய சரக்கு வாகனம் ஒன்று காபி தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இந்தநிலையில் தப்பியோடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

குடகு-

பொன்னம்பேட்டை அருகே தேக்கு மரங்களை வெட்டி கடத்திய சரக்கு வாகனம் ஒன்று காபி தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இந்தநிலையில் தப்பியோடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

தேக்கு மரம் கடத்தல்

குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுனில். அதே கிராமத்தில் இவருக்கு சொந்தமான காபி தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் ஏராளமான தேக்கு மரங்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுனில், பெங்களூருவில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக குடும்பத்தினருடன் சென்றிருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சிலர் காபி தோட்டத்திற்குள் நுழைந்து தேக்குமரங்களை ெவட்டியுள்ளனர். பின்னர் அந்த மரக்கட்டைகளை மர்ம நபர்கள் சரக்கு வாகனத்தில் ஏற்றி கொண்டு கேரளா மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தனர். நல்லூர் கிராமத்தில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த காபி தோட்டத்திற்குள் கவிழ்ந்தது.

சரக்கு வாகனம் கவிழ்ந்தது

இந்த விபத்தில் மரக்கட் டைகளுடன் வாகனம், காபி தோட்டத்திற்குள் கவிழ்ந்தது. இந்த சத்தம் கேட்டு கூலி தொழிலாளிகள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது வாகனத்தில் இருந்த நபர்கள் வாகனத்தையும், தேக்கு மரக்கட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடிவிட்டனர்.

இதையடுத்து வாகனம் மற்றும் மரக்கட்டைகள் அங்கேயே கிடந்தது. இதை பார்த்த கூலி தொழிலாளிகள் உடனே பொன்னம்பேட்டை போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

வலைவீச்சு

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் வனத்துறையினர் ரூ.2 லட்சம் மதிப்பிலான வாகனம் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பிலான தேக்கு மரக்கட்டைகளை கைப்பற்றினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் தேக்கு மரக்கட்டைகளை கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இது குறித்து சம்பந்தப்பட்ட தோட்டத்தின் உரிமையாளர் சுனில் கொடுத்த புகாரின் பேரில் பொன்னம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story