செல்லக்கெரே அருகே குளம் உடைந்து 20 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது


செல்லக்கெரே அருகே குளம் உடைந்து 20 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 15 Oct 2022 12:30 AM IST (Updated: 15 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

செல்லக்கெரே அருகே குளம் உடைந்து 20 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததில் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

சிக்கமகளூரு;


சித்ரதுர்கா மாவட்டம் செல்லக்கெரே தாலுகா மஹாலபுரா கிராமத்தில் குளம் ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த குளத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து குளத்தில் தண்ணீர் முழுவதும் நிரம்பியது.

மேலும் அந்த குளத்தின் கரையில் விரிசல் ஏற்பட்டு இருந்தது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அந்த குளத்தின் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குளத்தில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகே உள்ள கவுரிபுரா கிராமத்திற்குள் புகுந்தது.

மேலும் தண்ணீர் அந்த கிராமத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த கிராம மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இதுகுறித்து தகவல் அறிந்து கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் அந்த வீடுகளில் வசித்து வந்தவர்களை அரசு பள்ளியில் ஒன்றில் தங்க வைத்துள்ளனர்.

இதையடுத்து செல்லக்கெரே தாசில்தார் வெள்ளம் புகுந்த கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் வெள்ளம் புகுந்த வீடுகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் அரசு நிவாரணம் வழங்க உள்ளதாக அவர் உறுதியளித்தார். மேலும் தண்ணீர் வடியும் வரை அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை கொடுத்து தங்க வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story