தீர்த்தஹள்ளி அருகே பள்ளி மாணவியை கடத்த முயற்சி


தீர்த்தஹள்ளி அருகே பள்ளி மாணவியை கடத்த முயற்சி
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தீர்த்தஹள்ளி அருகே பள்ளி மாணவியை கடத்த முயன்ற மர்மநபர்களை, பள்ளி மாணவர்கள் கற்கள் வீசி விரட்டியடித்தனர்.

சிவமொக்கா;


சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா மேலினகுருவள்ளி அருகே உள்ள மஞ்சப்பா சதுக்கத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவள் நேற்றுமுன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாள். அப்போது அங்கு ஆம்னி வேனில் வந்த மர்மநபர்கள் 2 பேர் சிறுமி முன்பு வேனை நிறுத்தி உள்ளனர்.

இதையடுத்து மாணவியிடம் சாக்லெட் வாங்கி தருவதாக கூறி கடத்த முயன்றுள்ளனர். மேலும் சிறுமியை இழுத்து சென்றுள்ளனர். இதனால் பயந்து போன சிறுமி கத்தி கூச்சலிட்டுள்ளார். அப்போது மாணவியின் சத்தம்கேட்டு அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் 2 பேர், உடனே கீழே கிடந்த கல்லை எடுத்து சிறுமியை கடத்த முயன்ற மர்மநபர்கள் மீது வீசியுள்ளனர்.

இதையடுத்து மர்மநபர்கள் மாணவியை விட்டு விட்டு தாங்கள் வந்த ஆம்னி வேனில் தப்பி ஓடினர். இதையடுத்து அந்த மாணவா்கள் மாணவியை மீட்டனர். மேலும் இதுகுறித்து அவர்கள் தீர்த்தஹள்ளி போலீசாருக்கும், மாணவியின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு வந்து போலீசார் சிறுமியிடம் விசாரித்தனர்.

ேமலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாக காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story