20 ஆண்டுகளாக 275 வழக்குகள் தேக்கம் சி.பி.ஐ. தொடுத்துள்ள 6,700 ஊழல் வழக்குகள் கோர்ட்டுகளில் நிலுவை அதிர்ச்சி தகவல்கள்
சி.பி.ஐ. தொடுத்துள்ள 6,700 ஊழல் வழக்குகள் கோர்ட்டுகளில் நிலுவையில் இருப்பதாகவும், 275 வழக்குகள் 20 ஆண்டுகளாக தேங்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
சி.பி.ஐ. தொடுத்துள்ள 6,700 ஊழல் வழக்குகள் கோர்ட்டுகளில் நிலுவையில் இருப்பதாகவும், 275 வழக்குகள் 20 ஆண்டுகளாக தேங்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.வும் மத்திய கண்காணிப்பு ஆணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) ஆண்டறிக்கை வெளியாகி உள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-
* சி.பி.ஐ. தொடுத்துள்ள ஏறத்தாழ 6,700 ஊழல் வழக்குகள் கோர்ட்டு விசாரணையில் உள்ளன. அவற்றில் 275 வழக்குகள், 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருக்கின்றன.
* 1,939 வழக்குகள் 10 முதல் 20 ஆண்டுகள் வரையும், 2,273 வழக்குகள் 5 முதல் 10 ஆண்டுகள் வரையும், 811 வழக்குகள் 3 முதல் 5 ஆண்டுகள் வரையும், 1,399 வழக்குகள் 3 ஆண்டுகளுக்குள்ளும் தேங்கி உள்ளன. இது, கடந்த ஆண்டு டிசம்பர் 31 நிலவரம்.
* 9.935 மேல்முறையீட்டு வழக்குகளில் 9,698 ஐகோர்ட்டுகளிலும், 237 சுப்ரீம் கோர்ட்டிலும் நிலுவையில் உள்ளன. 1.099 மறு ஆய்வு முறையீடுகளும் ஐகோர்ட்டுகளில் தேங்கி உள்ளன.
* 10 ஆயிரத்து 974 அப்பீல் மற்றும் மறு ஆய்வு முறையீடுகளில் 361 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேலாகவும், 558 வழக்குகள் 15 ஆண்டுகளுக்கு மேலாகவும், 1,749 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேலாகவும், 3,665 வழக்குகள் 5 ஆண்டுகளுக்கு மேலாகவும், 2,818 வழக்குகள் 2 ஆண்டுகளுக்கு மேலாகவும், 1,823 வழக்குகள் 2 ஆண்டுகளுக்குள்ளும் நிலுவையில் உள்ளன.
* 645 ஊழல் வழக்குகளில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இவற்றில் 35 வழக்குகளில் விசாரணை 5 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கிறது.
* 2021-ம் ஆண்டு 549 சிவில் சர்வீசஸ் (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஐ.எப்.எஸ்) அதிகாரிகள் மீதும், 221 அரசிதழ் பதிவு பெற்ற (கெஜட்டட்) அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
* சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு எதிராக 75 வழக்குகள் துறைசார் விசாரணையின் உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.