நேபாள முன்னாள் பிரதமர் பிரசந்தா உடன் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சந்திப்பு


நேபாள முன்னாள் பிரதமர் பிரசந்தா உடன் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சந்திப்பு
x

Image Courtesy: ANI 

தினத்தந்தி 17 July 2022 10:54 AM GMT (Updated: 17 July 2022 10:55 AM GMT)

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேபாள முன்னாள் பிரதமர் பிரசந்தா சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

நேபாள முன்னாள் பிரதமரும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) தலைவருமான புஷ்பா கமல் தஹால் பிரசந்தா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், இந்தியா, நேபாள நாடுகள் மற்றும் இரு கட்சிகளுக்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் விவாதித்தனர்.

இது குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறுகையில், "இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் குறிப்பாக நாட்டின் பழமையான கலாச்சாரம் மற்றும் இருநாட்டு மக்களுக்கியேயான பிணைப்பு குறித்து விவாதித்தோம். மேலும், இரு கட்சிகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் விவாதித்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரும் பங்கேற்றார்.


Next Story