பெங்களூரு விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வசதி


பெங்களூரு விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வசதி
x
தினத்தந்தி 16 Dec 2022 2:03 AM IST (Updated: 16 Dec 2022 2:03 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பெங்களூரு:-

சக்கர நாற்காலி

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் நெரிசல் அதிகமாக உள்ளது. அங்கு ஆண்டுக்கு சுமார் 2 கோடி பேர் வந்து செல்கிறார்கள். அங்கு பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பெங்களூரு விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி பயணிகளின் வசதிக்காக தனி பயணிகள் சோதனை கவுண்ட்டர் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 5-வது நுழைவு வாயிலில் சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளன.

அந்த சக்கர நாற்காலியில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விமான நிலைய ஊழியர்கள் உதவி செய்வார்கள். சோதனைக்காக 1-ம் எண் கவுண்ட்டர் அவர்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கவுண்ட்டரில் மாற்றுத்திறனாளிகள் சோதனை, ஆவணங்கள் ஆய்வு போன்ற அனைத்து பணிகளும் அங்கு மேற்கொள்ளப்படும். இதனால் அவர்கள் விரைவாக சோதனை பணிகளை முடித்து கொண்டு வெளியே செல்ல முடியும் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.

சர்க்கரை நோய்

மாற்றுத்திறனாளிகளுக்கு இத்தகைய வசதி செய்து கொடுக்கும் விமான நிலையங்கள் 'சன்பிளவா்' என்ற பட்டியலில் இணைகின்றன. இந்த பட்டியலில் தற்போது பெங்களூரு சர்வதேச விமான நிலையமும் இணைந்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்தகைய நோயாளிகளும் இந்த சேவையை பெற அனுமதிக்கப்படுவார்கள்.


Next Story