கர்நாடகத்தில் புதிதாக 155 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 155 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் புதிதாக 155 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 20 ஆயிரத்து 48 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 155 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், பெங்களூருவில் மட்டும் 150 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 3 பேருக்கும், தாவணகெரே மற்றும் துமகூருவில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. கொரோனாவுக்கு புதிதாக யாரும் உயிர் இழக்கவில்லை. 166 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று மீண்டு வந்துள்ளனர்.

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 1655 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடகத்தில் நேற்று முன்தினம் 95 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று மீண்டும் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story