கர்நாடகத்தில் புதிதாக 2,329 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 2,329 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 2,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் அதிகபட்சமாக 1,606 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. மைசூருவில் 168 பேருக்கும், கதக் மற்றும் யாதகிரியில் தலா ஒருவருக்கும் என ஒட்டுமொத்தமாக 2,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று சிகிச்சை பலனின்றி 2 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்று 1,782 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தொற்று விகிதம் 7.73 சதவீதமாக உள்ளது. மேற்கண்ட தகவலை கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story