கர்நாடகத்தில் புதிதாக 720 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக   720 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் புதிதாக 720 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கர்நாடகத்தில் நேற்று 26,883 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 720 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் பெங்களூருவில் அதிகபட்சமாக 273 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

அடுத்ததாக ஹாசன் மாவட்டத்தில் 63 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. நேற்று ஒரே நாளில் ஆஸ்பத்திரியில் இருந்து 662 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். பல்லாரி மற்றும் சிவமொக்காவில் தலா ஒருவர் என மொத்தம் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 2.67 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.


Related Tags :
Next Story