மும்பை: ரூ.60 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - நைஜீரிய நாட்டவர் கைது
மும்பையில் 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த நைஜீரிய நாட்டவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பை நகரம் ஹொரிகன் நகரில் சிலர் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு சுற்றித்திரிந்த நைஜீரியாவை சேர்ந்த தைவொ அயொடொலி சம்சன் என்ற நபரை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது, அந்த நபர் மறைத்து வைத்திருந்த 400 கிராம் போதைப்பொருளை கைப்பற்றினர். இதையடுத்து, நைஜீரியர் சம்சனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 60 லட்ச ரூபாய் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story