பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு


பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு
x

மகாபந்தன் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ்குமார் தேர்வாகியுள்ளார்.

பாட்னா,

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பீகார் முதல் மந்திரி பதவியில் இருந்து நிதிஷ் குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதத்துடன் கவர்னரை இன்று நிதிஷ்குமார் சந்தித்தார்.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் 45, ராஷ்ட்ரிய ஜனதா தளம் 79, காங்கிரஸ் 19, இடதுசாரிகள் 12 எம்.எல்.ஏக்களை சேர்த்து புதிய கூட்டணிக்கு சுமார் 160 உறுப்பினர்கள் உள்ளனர். அந்த வகையில் பீகாரில் மொத்தமுள்ள 243 எம்.எல்.ஏக்களின் சுமார் 160 பேரின் ஆதரவு ஐக்கிய ஜனதா தளம்-ஆர்.ஜேடி கூட்டணிக்கு உள்ளது.

இந்த மகாபந்தன் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ்குமார் தேர்வாகியுள்ளார். இந்த கூட்டணியின் மூலமாக பெரும்பான்மை பலம் உள்ளதால், மீண்டும் பீகார் மாநிலத்தின் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதையடுத்து பீகார் மாநில கவர்னரை சந்தித்து, ஆட்சியமைக்க நிதிஷ்குமார் உரிமை கோரியுள்ளார்.


Next Story