"பூவும் சால்வையும் வேண்டாம்; புத்தகங்களே போதும்" - முதல்-மந்திரி சித்தராமையா
பூவும் சால்வையும் வேண்டாம்; புத்தகங்களே போதும் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து முதல்-மந்திரியாக சித்தராமையா நேற்று முன்தினம் பதவி ஏற்றார். இதையடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் முதலாவது சட்டசபை கூட்டம் பெங்களூரு விதானசவுதாவில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 24-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தன்னை சந்திப்ப வருபவர்களுக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாகா அவர் கூறுகையில், "இனி தனிப்பட்ட மற்றும் பொது நிகழ்வுகளின் போது, மரியாதை நிமித்தமாக எனக்கும் வரும் பூக்கல் அல்லது சால்வைகளை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். என் மீது அன்பையும் மரியாதையையும் பரிசுகளாக வெளிப்படுத்த விரும்புவோர், எனக்கு புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கலாம்; உங்கள் அன்பும் பாசமும் என் மீது தொடர்ந்து இருக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.