சமூக வலைதளங்களில் வரும் எதிர்மறை கருத்துகள் என்னை ஒரு போதும் பாதிக்காது - ஷாருக்கான் பேச்சு


சமூக வலைதளங்களில் வரும் எதிர்மறை கருத்துகள் என்னை ஒரு போதும் பாதிக்காது - ஷாருக்கான் பேச்சு
x

எதிர்மறை சமூக ஊடக நுகர்வு அதிகரிப்பதாக நான் எங்கோ படித்தேன் என கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ஷாருக்கான் பேசினார்.

கொல்கத்தா,

28வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ஷாருக்கான் பேசியதாவது:-

சமூக வலைதளங்கள் பல நேரங்களில் ஒரு பிற்போக்கு பார்வையோடு இயக்கப்படுகின்றன. இது மனிதனை கீழ்த்தரமாக சிந்திக்க வைக்கிறது. என்னை சுற்றி என்ன நடந்தாலும் சரி, என்னைப்போன்றவர்கள் எப்போது பாசிடிவ்வாகவே இருப்பார்கள். எதிர்மறை சமூக ஊடக நுகர்வு ஊடகங்களில் வரும் எதிர்மறை கருத்துகள் என்னை ஒருபோதும் பாதிக்காது என்றார்.

பதான் பட பாடல் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story