ஈத்கா மைதானத்தை வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்க கூடாது; முஸ்லிம்கள், தாசில்தார்-மேயரிடம் மனு


ஈத்கா மைதானத்தை வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்க கூடாது; முஸ்லிம்கள், தாசில்தார்-மேயரிடம் மனு
x

உப்பள்ளியில் உள்ள ஈத்கா மைதானத்தை வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று முஸ்லிம்கள், தாசில்தார்-மேயரிடம் மனு கொடுத்துள்ளனர்.

உப்பள்ளி;


தாா்வார் மாவட்டம் உப்பள்ளி மாநகராட்சி மேயர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகத்தில் முஸ்லிம் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் தாசில்தார் சசிதர் மற்றும் மேயர் ஈரேஷ் அஞ்சட்டகேரி ஆகியோரிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

உப்பள்ளியில் உள்ள கித்தூர் ராணி சென்னம்மா சர்க்கிள் அருகே ஈத்கா மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் முஸ்லிம் சமுதாயத்தினர் மட்டும் ஆண்டுக்கு இரண்டு முறை வழிபாடுகள் நடத்த கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இதனை கடந்த 2010-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு ஏற்று அனுமதி வழங்கியது. இந்த நிலையில் ஈத்கா மைதானத்தை வேறு யாரும் பயன்படுத்த தாசில்தார் மற்றும் மேயர் அனுமதி கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் கோர்ட்டு அவமதிப்பு மற்றும் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆகையால் வேறு அமைப்பினருக்கு அனுமதி வழங்க கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. அந்த மனுக்களை பெற்று கொண்ட தாசில்தார்-மேயர் ஆகியோர் இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story