பொருளாதார நிபுணரும், திட்ட கமிஷனின் முன்னாள் உறுப்பினர் அபிஜித் சென் காலமானார்
பொருளாதார நிபுணரும், திட்ட கமிஷனின் முன்னாள் உறுப்பினருமான அபிஜித் சென் (வயது 72) காலமானார்.
புதுடெல்லி,
முன்னாள் திட்டக் கமிஷன் உறுப்பினரும், கிராமப்புற பொருளாதாரம் குறித்த நாட்டின் தலைசிறந்த நிபுணர்களில் ஒருவருமான பொருளாதார நிபுணர் அபிஜித் சென் திங்கள்கிழமை இரவு காலமானார். அபிஜித் சென் வயது 72.
அபிஜித் சென் திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது. எனவே அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம், ஆனால் நாங்கள் அங்குச் செல்வதற்குள் மரணம் அடைந்துவிட்டார் என்று அவரது சகோதரர் டாக்டர் ப்ரோனாப் சென் கூறினார்.
நவம்பர் 18, 1950 இல் ஜாம்ஷெட்பூரில் பிறந்த அபிஜித் சென், டெல்லியில் உள்ள சர்தார் படேல் வித்தியாலயாவில் பள்ளியில் பள்ளி படிப்பை முடிந்தார். இதைத் தொடர்ந்து டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்றார். பொருளாதாரத்திற்கு மாறிய அபிஜித் சென், 1981 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள்ளார்.
இவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியாக பணியாற்றி உள்ளார். இருவருடை மாணவர்கள் இன்று பல முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர்.
2010 இல், பொதுச் சேவைக்காக அபிஜித் சென்-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. அவர் மனைவி ஜெயதி கோஷ்-ம் பொருளாதார நிபுணர் மற்றும் மகள் ஜாஹ்னவி சென், தி வயர் பத்திரிகையின் துணை ஆசிரியராக உள்ளார்.