"வந்தே பாரத் ரெயிலில் சிறப்பு எதுவும் இல்லை"- மம்தா பானர்ஜி விமர்சனம்!


வந்தே பாரத் ரெயிலில் சிறப்பு எதுவும் இல்லை- மம்தா பானர்ஜி விமர்சனம்!
x
தினத்தந்தி 6 Jan 2023 10:16 AM IST (Updated: 6 Jan 2023 10:29 AM IST)
t-max-icont-min-icon

வந்தே பாரத் ரெயிலில் சிறப்பு எதுவும் இல்லை என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

கொல்கத்தா,

கடந்த செவ்வாய்க்கிழமை வந்தே பாரத் விரைவு ரெயில் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் அதன் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த கல்வீச்சு தாக்குதல் சம்பவம் மேற்குவங்க மாநிலத்தின் மால்டா ரெயில் நிலையம் அருகில் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை

இந்த தாக்குதல் தொடர்பாக இந்திய ரயில்வே சட்டம் பிரிவு 154 ன்படி அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வந்தே பாரத் ரெயில் மீது கற்கள் வீசப்பட்டது தொடர்பாக மேற்கு வங்க முதல்-மந்திர் மம்தா பானர்ஜி கூறியதாவது:-

அதைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். நான் நல்ல மனநிலையில் இருக்கிறேன். கங்காசாகர் மேளாவுக்குப் நான் புறப்படுகிறேன். என்ன கேட்பதாக இருந்தாலும் கங்காசாகரில் கேளுங்கள் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கற்கள் வீசப்பட்டது அண்டை நாடான பீகாரில் தான். எனது மாநிலத்தில் அல்ல.

மேற்கு வங்க மாநிலத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்திகளை பரப்பும் ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வந்தே பாரத் விரைவு ரெயிலை சிறப்பு வாய்ந்ததாக கூற எதுவும் இல்லை. இது ஒரு புதிய எஞ்சினுடன் புதுப்பிக்கப்பட்ட பழைய ரயில் தான் என்று கூறினார்.


Next Story