திரவுபதி முர்மு பிரசார கூட்டத்தை புறக்கணித்த 21 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு


திரவுபதி முர்மு பிரசார கூட்டத்தை புறக்கணித்த 21 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு
x

திரவுபதி முர்மு பிரசார கூட்டத்தை புறக்கணித்த 21 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பா.ஜனதா கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த்சின்காவும் போட்டியிடுகின்றனர். இதையொட்டி பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு பெங்களூருவில் பிரசாரம் செய்தார். அவர் கடந்த 10-ந் தேதி இங்கு எம்.எல்.ஏ.க்களிடம் வாக்கு சேகரித்தார். அவர் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். இந்த கூட்டத்தில் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டு இருந்தார்.

ஆனால் சுமார் 21 எம்.எல்.ஏ.க்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். அதில் சிலர் தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக முன்கூட்டியே அனுமதி பெற்று கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் அந்த கூட்டத்தை புறக்கணித்த 21 எம்.எம்.எல்.ஏ.க்களுக்கும் பா.ஜனதா கட்சி விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது. இதற்கிடையே உடல் நிலை பாதிப்பு காரணமாக சீனிவாச பிரசாத் எம்.எல்.ஏ. பெங்களூருவில் வாக்களிக்க அனுமதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story