இந்திய கடற்படையின் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை வெற்றி
இந்திய கடற்படையின் அணு ஆயுத வல்லமை பெற்ற நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை வெற்றிபெற்றது.
புதுடெல்லி,
இந்திய கடற்படையின் அணு ஆயுத வல்லமை பெற்ற நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் அரிஹண்ட். உள்நாட்டிலேயே விசாகப்பட்டினம் கப்பல் கட்டுமான தலத்தில் கட்டப்பட்ட இந்த நீர்மூழ்கி கப்பல் 2009-ம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலில் இருந்து நேற்று ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. கடலுக்கு அடியில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த சோதனை இந்திய கடற்படைக்கு கூடுதல் பலம் அளித்துள்ளது.
6 ஆயிரம் டன் எடைகொண்ட நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை வெற்றிகரமாக நடத்தப்பட்ட சோதனை இந்திய கடற்படை மற்றும் இந்திய ராணுவத்தின் அணு ஆயுத வல்லமையை அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story