கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கூடாது; ஐகோர்ட்டு உத்தரவு


கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஆக்கிரமிப்பை   அகற்ற கூடாது; ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில் மழை பாதிப்புக்கு காரணமான ராஜகால்வாய் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி, பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனமும் ராஜகால்வாய்களை ஆக்கிரமித்து காம்பவுண்டு சுவர் கட்டி உள்ளது. அவற்றை இடிப்பதற்காக மாநகராட்சி நடவடிக்கை எடுத்திருந்தது.

இதனை எதிர்த்து கம்ப்யூட்டர் நிறுவனம் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, ராஜ கால்வாயை ஆக்கிரமித்துள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் மீது பலவந்தமான நடவடிக்கை எடுக்க கூடாது என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்ற இடைக்கால தடை விதித்தும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.


Next Story