தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த சிக்கமகளூரு நகரசபைக்கு சொந்தமான நிலம் மீட்பு


தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த சிக்கமகளூரு நகரசபைக்கு சொந்தமான நிலம் மீட்பு
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த சிக்கமகளூரு நகரசபைக்கு சொந்தமான நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு அய்யப்பன் நகர் பகுதியில் வசித்து வரும் ஒருவர், தனது நிலத்துக்கு அருகே உள்ள நகரசபைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தார். மேலும் அந்த நிலத்தை சுற்றி இரும்பு கம்பி வேலி அமைத்து இருந்தார்.

அதுமட்டுமின்றி ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை சொந்தம் கொண்டாடி வந்தார். இதுபற்றி நகரசபை அதிகாரிகள் எச்சரித்தும், நோட்டீஸ் அனுப்பியும் அவர் கேட்கவில்லை. இந்த நிலையில் நகரசபை அதிகாரி நாகப்பா தலைமையில் பொக்லைன் எந்திரத்துடன் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இரும்பு கம்பி வேலியை இடித்து அகற்றி நகரசபைக்கு சொந்தமான நிலத்தை மீட்டனர். இனிமேல் யாராவது நகரசபைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்தால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று நகரசபை தலைவர் வேணுகோபால் கூறினார்.


Next Story