ஒடிசா ரெயில் விபத்து - ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்
ரெயில் விபத்தில் பலர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 120 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 800 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ரெயில் விபத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் பலர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். மீட்புப்பணிகள் வெற்றி அடையவும், காயம் அடைந்தவர்கள் விரைவாக நலமடையவும் பிரார்த்திக்கிறேன்" என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story