பாசன கால்வாயில் மூதாட்டியின் உடல் மீட்பு


பாசன கால்வாயில் மூதாட்டியின் உடல் மீட்பு
x

மண்டியா அருகே பாசன கால்வாயில் மூதாட்டி ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார்.

மண்டியா:


மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கோடலகுப்பே கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர், அப்பகுதியில் உள்ள பாசன கால்வாயில் பிணமாக கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் ஸ்ரீரங்கப்பட்டணா புறநகர் போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.


பிணமாக கிடந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் கால்வாயில் கால் தவறி விழுந்து இறந்தாரா அல்லது அவர் கால்வாயில் குதித்து தற்கொலை செய்தாரா என்பது தெரியவில்லை. அதுதொடர்பாக ஸ்ரீரங்கப்பட்டணா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story