ஆட்டோ டிரைவர் மீது ஆயுதங்களால் தாக்குதல்


ஆட்டோ டிரைவர் மீது   ஆயுதங்களால் தாக்குதல்
x

ஆட்டோ டிரைவர் மீது ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது,

பெங்களூரு: பெங்களூரு பெல்லந்தூர் அருகே கைகொண்டரஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் மஞ்சுநாத் (வயது 40). ஆட்டோ டிரைவர். இந்த நிலையில் மஞ்சுநாத் தனது ஆட்டோவில் பெல்லந்தூர் பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது ஆட்டோவை வழி மறித்த 3 பேர் பன்னரகட்டாவுக்கு செல்ல வேண்டும் என்று கேட்டு உள்ளனர். இதையடுத்து பன்னரகட்டா செல்ல ரூ.500 ஆகும் என்று மஞ்சுநாத் கூறியுள்ளார்.


ஆனால் கூடுதலாக கட்டணம் கேட்பதாக கூறி மஞ்சுநாத்திடம் 3 பேரும் தகராறு செய்ததுடன் ஆயுதங்களை எடுத்து தாக்கினர். அப்போது அந்த வழியாக சில ஆட்டோக்கள் வந்ததால் 3 பேரும் தப்பி சென்றனர். 3 பேரும் தாக்கியதில் காயம் அடைந்த மஞ்சுநாத்தை, ஆட்டோ டிரைவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story