கன்னட தாய் வாழ்த்து விவகாரத்தில் அரசு விளக்கம் அளிக்க ஐகோா்ட்டு நோட்டீசு


கன்னட தாய் வாழ்த்து விவகாரத்தில்  அரசு விளக்கம் அளிக்க ஐகோா்ட்டு நோட்டீசு
x

கன்னட தாய் வாழ்த்து விவகாரத்தில் அரசு விளக்கம் அளிக்க ஐகோா்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் கன்னட தாய் வாழ்த்து பாடல் 2½ நிமிடம் ஓடுவதற்கு கடந்த மாதம் (செப்டம்பர்) 25-ந் தேதி அனுமதி வழங்கி அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. அதாவது மறைந்த மைசூருவை சேர்ந்த அனந்தசுவாமி அமைத்திருந்த இசையை இறுதி செய்து அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் கன்னட தாய் வாழ்த்து பாடலின் முழு இசையையும் அனந்தசுவாமி மற்றும் அஸ்வத் சேர்த்து இசையையும் சேர்த்திருப்பதாக, அரசால் அமைக்கப்பட்டு குழு தெரிவித்திருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், கன்னட தாய் வாழ்த்து பாடல் விவகாரத்தில் அனந்தசுவாமியை அரசு அவமரியாதை செய்திருப்பதாகவும், எனவே கடந்த 25-ந் தேதி பிறப்பித்த அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் இசையமைப்பாளர் கிக்கேரி கிருஷ்ணமூர்த்தி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணா தீட்சித் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கன்னட தாய் வாழ்த்துபாடல் விவகாரத்தில் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி, அரசுக்கு நோட்டீசு அனுப்பி நீதிபதி கிருஷ்ணா தீட்சித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story