சட்டசபை தேர்தலையொட்டி மைசூருவில் மெழுகுவர்த்தி ஏந்தி விழிப்புணர்வு
சட்டசபை தேர்தலையொட்டி மைசூருவில் மெழுகுவர்த்தி ஏந்தி விழிப்புணர்வை தேர்தல் அதிகாரிகள் ஏற்படுத்தினர்.
மைசூரு-
கர்நாடகாவில் சட்டசபை பொதுத்தேர்தல் அடுத்த மாதம் (மே) 10-ந் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 13-ந் தேதி நடக்கிறது. இந்தநிலையில் பொதுமக்களுக்கு தேர்தல் அதிகாரிகள் மாநிலம் முழுவதும் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மைசூரு மாவட்டத்திலும் தேர்தல் விழிப்புணர்வு நடந்தது. மைசூரு டவுன், உன்சூர், எச்.டி.கோட்டை உள்பட பல்வேறு இ்டங்களில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தை தேர்தல் அதிகாரிகள் நடத்தினர். ஒரு சில இடங்களில் இரவு மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் ஊர்வலமாக வந்தனர். வருகிற சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயமாக ஓட்டு போட வேண்டும்.
18 வயதுக்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும். வாக்களிப்பது ஒவ்வொரு வாக்காளர்களின் கடமையாகும். அதன் மூலமாக நாட்டை வலுப்படுத்த வேண்டும். வாக்களிப்பதன் மூலம் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். வாக்காளர் அனைவரும் கட்டாயமாக ஓட்டு போட வேண்டும். இதன் மூலம் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு செய்ய வாக்காளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வாக்காளர்கள் அனைவரும் அந்தந்த பகுதியில் உள்ள வாக்கு சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.