டெல்லியில் தொழிற்சாலை தீவிபத்தில் ஒருவர் பலி


டெல்லியில் தொழிற்சாலை தீவிபத்தில் ஒருவர் பலி
x

டெல்லியில் தொழிற்சாலை தீவிபத்தில் ஒருவர் பலியானார்.

புதுடெல்லி,

டெல்லியின் கிழக்கு மண்டலமான பத்பர்கஞ்ச் பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் ஒரு தொழிற்சாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் விரைந்தனர்.

9 தீயணைப்பு வாகனங்கள் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்தபோதிலும் இந்த தீவிபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


Next Story