மணிப்பூர் விவகாரம்: 'தர்மத்தை கடைப்பிடிப்பவர்களே தர்மத்தை போதிக்க முடியும்' - மத்திய அரசு மீது ப.சிதம்பரம் தாக்கு


மணிப்பூர் விவகாரம்: தர்மத்தை கடைப்பிடிப்பவர்களே தர்மத்தை போதிக்க முடியும் - மத்திய அரசு மீது ப.சிதம்பரம் தாக்கு
x

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகளை சுப்ரீம் கோர்ட்டு கடுமையாக சாடியுள்ளதை சுட்டிக்காட்டி மத்திய அரசு மீது ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.

புதுடெல்லி,

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகளை சுப்ரீம் கோர்ட்டு கடுமையாக சாடியுள்ளது. இதை சுட்டிக்காட்டி மத்திய அரசு மீது முன்னாள் நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'மணிப்பூர் அரசு மீதான சுப்ரீம் கோர்ட்டின் குற்றச்சாட்டுகள் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் மற்றும் இம்பாலில் உள்ள முதல்-மந்திரி அலுவலகத்துக்கு சென்று சேர எவ்வளவு நேரம் ஆகும்? மணிப்பூர் முதல்-மந்திரி பைரேன் சிங்குக்கு அரசியலமைப்பு அறநெறியில் ஏதேனும் உணர்வு இருந்தால், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். தர்மத்தை கடைப்பிடிப்பவர்களால் மட்டுமே தர்மத்தை போதிக்க முடியும்' என குறிப்பிட்டு உள்ளார்.

மத்திய அரசு தனது அரசியல் சாசன பொறுப்பு எந்திரத்தை (பிரிவு 355 மற்றும் 356) அணைத்து, சாவியை தூக்கி எறிந்து இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story