கேரளாவில் கனமழை காரணமாக சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை !
கேரளாவில் புதன்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோழிக்கோடு,
திருவனந்தபுரம்: தென்-மத்திய வங்கக்கடலில் உருவாகி உள்ள சூறாவளி சுழற்சி காரணமாக நாட்டின் தென் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கேரளாவில் புதன்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கி.மீ வேகம் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
ஆற்றங்கரைகள், கடலோரப் பகுதிகள், மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படக்கூடிய இடங்களில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. சில நாட்களில் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது