சார்மடி மலைப்பகுதியில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவு


சார்மடி மலைப்பகுதியில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவு
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சார்மடி மலைப்பகுதியில் அடையாளம் தெரியாத உடல்கள் வீசப்படுவதால் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த மேற்கு மண்டல ஐ.ஜி சந்திரகுப்தா போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சிக்கமகளூரு:-

அடையாளம் தெரியாத உடல் வீச்சு

சிக்கமகளூரு மாவட்டம் சார்மடி மலைப்பகுதியில் அடையாளம் தெரியாத உடல்கள் கண்டுபிடிக்கப்படுகிறது. பெரும்பாலும் இந்த உடல்கள் அனைத்தும் கொலை செய்யப்பட்டு இங்கு கொண்டு வந்த வீசப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தாலும், உடல் யாருடையது என்பது தெரிவது இல்லை.

மேலும் மலைப்பகுதியில் உடல்களை வீசுவதும் குறையவில்லை. இந்நிலையில் நேற்று சிக்கமகளூரு வந்த மேற்கு மண்டல ஐ.ஜி.சந்திரகுப்தா, மாவட்ட போலீ்ஸ்

சூப்பிரண்டு உமா பிரசாந்த் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மலைப்பகுதியில் அதிகப்படியான உடல்கள் வீசப்படுவது குறித்து அவர் விசாரித்ததாக கூறப்படுகிறது.

உடல்கள் வீச்சு

இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்த ஐ.ஜி.சந்திரகுப்தா கூறியதாவது:-

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவில் உள்ள சார்மடி மலைப்பகுதியில் அடையாளம் தெரியாதவர்களின் உடல்கள் வீசப்படுகிறது. இது மழை நேரங்களில் அடித்து செல்லப்படுவதால், அந்த உடல்களை மீண்டும் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

சில நேரங்களில் வன விலங்குகள், அந்த உடலை எடுத்து வந்து சாலைகளில் போட்டுவிட்டு செல்கின்றன. குறிப்பாக வெளி மாவட்டத்தில் கொலை செய்தவர்களின் உடல்கள்தான் இங்கு வீசப்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டிற்கு உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் கொட்டிகேஹாராவையொட்டி உள்ள சார்மடி மலைப்பகுதியில் கூடுதல் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளும்படி போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளேன். இது தவிர இரவு நேரங்களில் சார்மடி மலைப்பகுதியொட்டி இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story