பிற மாநிலத்தினர் உள்ளூர் மொழியை கற்க வேண்டும் மந்திரி அஸ்வத் நாராயண் பேச்சு


பிற மாநிலத்தினர் உள்ளூர் மொழியை கற்க வேண்டும்  மந்திரி அஸ்வத் நாராயண் பேச்சு
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பிற மாநிலத்தில் இருந்து உள்ளூருக்கு வருபவர்கள் கன்னட மொழியை கற்றுக்கொள்ளவேண்டும் என்று மந்திரி அஸ்வத்நாராயண் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

கேரள சமாஜம் சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாட்ட விழா மல்லேஸ்வரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கர்நாடகத்தில் கேரள மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறார்கள். அவர்கள் திறன் மிக்கவர்கள், தொடர்ந்து கற்றலில் ஆர்வம் உள்ளவர்கள். பெங்களூரு மலையாளிகளையும் ஆதரித்துள்ளது. அவர்கள் உள்ளூர் மொழி மற்றும் கலாசாரத்தையும் கற்று கொண்டுள்ளனர். கர்நாடகத்தில் வசிக்கும் பிற மாநிலத்தினர் இங்குள்ள மொழி, கலாசாரத்தை கற்று கொள்வது முக்கியம். கர்நாடகம் பல்வேறு கலாசாரங்களை வெளிப்படையாக ஏற்கும் மாநிலமாக உள்ளது. பல்வேறு வாய்ப்புகள் மற்றும் வேற்றுமைகளை கொண்டுள்ள கர்நாடகத்தை ஒட்டுமொத்த உலகமே உற்று நோக்குகிறது. இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.


Next Story