மணிப்பூர் நிலச்சரிவு 55பேர் மாயம்
மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன பிராந்திய ராணுவ வீரர்கள் மற்றும் தொழிலாளர்கள் 55 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது
நோனி,
மணிப்பூர்மாநிலம் நோனி மாவட்டத்தின் துபூல் ரெயில் நிலையம் அருகே கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர்கள் மூலம் 13 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன பிராந்திய ராணுவ வீரர்கள் 52 பேர் மற்றும் தொழிலாளர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் ராணுவம், அசாம் ரைபிள்ஸ் குழு ஈடுபட்டு வருகின்றனர்.
நிலச்சரிவால் பாறைகள் சரிந்து ஆற்றின் குறுக்கே விழுந்ததால் ஏராளமானோர் புதையுண்டு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூர் முதல் மந்திரி என். பிரேன் சிங், இன்று நண்பகல் சம்பவ இடத்திற்குச் சென்று, ராணுவம், மாநில காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர்வாசிகளின் மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். பலியானவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ரூ. 5.லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம வழங்கப்படும் என கூறி உள்ளார்.