இந்தியா, அமெரிக்காவுக்கு எதிராக ரகசிய சைபர் ராணுவத்தை அமைத்த பாகிஸ்தான்
இந்தியா, அமெரிக்காவுக்கு எதிராக துருக்கி ஆதரவுடன் பாகிஸ்தான் சைபர் ராணுவத்தை அமைத்து உள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவுக்கு எதிராக சைபர் ராணுவத்தை அமைக்க பாகிஸ்தானுக்கு துருக்கி ரகசியமாக உதவியதற்கான தகவல் அம்பலமாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியாவை தாக்கும் வகையில் இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக நோர்டிக் மானிட்டர்(Nordic Monito)r தெரிவித்துள்ளது.
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த திட்டத்தை முன்மொழிந்தார். 2018 இல் துருக்கிய உள்துறை மந்திரி சுலைமான் சோய்லுவுடன் இம்ரான் கான் நடத்திய சந்திப்பின் போது இந்தியாவை எதிர்கொள்ள சைபர் ராணுவத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது என கூறி உள்ளது.
நோர்டிக் மானிட்டரின் தகவல்படி இந்த விஷயம் பாகிஸ்தான் மற்றும் துருக்கி அரசாங்கங்களுக்கு இடையே மிக உயர்ந்த மட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் பெரும்பாலான ஊழியர்களுக்கு கூட தெரியாமல் மிக ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.
துருக்கு எர்டோகனின் ஆளும் கட்சியுடன் இணையாத முக்கிய சமூக மற்றும் அரசியல் பிரமுகர்களை அவமானப்படுத்தவும் குறிவைக்கவும் சோய்லு ரகசியமாக டுவிட்டர் குழுவை அமைத்தார்.
சோயிலு ஒரு கட்டத்தில் 6000 பேர் கொண்ட படையைக் கட்டுப்படுத்தினார். அவரது கட்டளையின் கீழ் உள்ள சைபர் பிரிவு குழுக்கள் எதிரிகளின் மின்னஞ்சல்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை ஹேக் செய்து செல்போன்களில் இருந்து தனிப்பட்ட தரவுகளை அணுகி பிளாக்மெயில் செய்ய சேகரித்தனர்.