இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அமைக்க பாஜகவிற்கு மற்றொரு வாய்ப்பு வழங்க வேண்டும் - ராஜ்நாத் சிங் பேச்சு


இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அமைக்க பாஜகவிற்கு மற்றொரு வாய்ப்பு வழங்க வேண்டும் - ராஜ்நாத் சிங் பேச்சு
x

இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது.

சிம்லா,

இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது. முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் பாஜக ஆட்சி தற்போது உள்ளது. அங்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை பாஜக, காங்கிரஸ் என மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. இம்முறை இந்த ட்ரெண்ட்டை மாற்றி மீண்டும் பாஜகவே வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என முதல்-அமந்திரி ஜெய்ராம் தாக்கூர் சூளுரைத்துள்ளார்.

அம்மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜகவின் பைஜ்நாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

இமாச்சல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூரின் ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளது. இங்கு ஆட்சி அமைக்க அவருக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

பயங்கரவாதம் மூலம் இந்தியாவை பலவீனமாக்கலாம் என பாகிஸ்தான் நினைத்தது.உள்துறை மந்திரியாக நான் இருந்தபோது, பிரதமர் மோடி 10 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் முடிவெடுத்தார். பயங்கரவாதத்தை துடைத்து எறிய நம் வீரர்கள் பாகிஸ்தான் சென்றனர் என்றார்.


Next Story