கார் கியர் போடுவதில் படு கில்லி: டிரைவரின் காதலில் விழுந்த பணக்கார இளம்பெண்...!


கார் கியர் போடுவதில் படு கில்லி: டிரைவரின் காதலில் விழுந்த பணக்கார இளம்பெண்...!
x

பெண் ஒருவர் கார் டிரைவராக வேலை செய்பவரின் கியர் மாற்றும் ஸ்டைலில் ஈர்க்கப்பட்டு அவரையே காதலித்து திருமணம் செய்து உள்ளார்.

இஸ்லாமாபாத்,

இவ்வுலகின் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் காதல் உண்டு. கிட்டத்தட்ட முக்கால்வாசி ஐரோப்பாவை தனது வல்லமையால் கட்டியாண்ட மாவீரன் நெப்போலியன்கூட தனது மனைவியிடமிருந்து கடிதம் வராத நாட்களில் பூமத்திய ரேகைக்கடியில் தான் சிக்கிக்கொண்டதாக உணர்வதாகக் கூறினார். அந்த அளவிற்கு அவரது காதல் மனைவி மீது அன்பு இருந்தது.

ஒருவர் காதலில் விழுவதற்கு பல்வேறு சுவாரஸ்ய காரணிகள் இருக்க கூடும். அப்படி அவர்கள் காதலில் விழுந்தபிறகு, தங்கள் காதலரை அல்லது காதலியை எப்பெடியெல்லாம் வர்ணித்து தங்களது காதலை அவர்கள் வெளிப்படுத்துகின்றனர் என்பது, காதலில் விழுவதை விடவும் சுவாரஸ்யமான விஷயமாக மாறிவிடுகிறது.

அந்தவகையில், பாகிஸ்தானிய பெண் ஒருவர் கார் டிரைவராக வேலை செய்பவரின் கியர் மாற்றும் ஸ்டைலால் ஈர்க்கப்பட்டு அவரையே காதலித்து கரம் பிடித்து உள்ளார்.

பணக்கார வீட்டு பெண்ணான அவர் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவருக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்த டிரைவர் கியர் மாற்றுவதில் படு கில்லியாக இருந்திருக்கிறார். பயிற்சி கொடுத்தபோது அவரது கியர் மாற்றும் ஸ்டைலை கண்ட அந்த பெண், அவர் மீது காதல் வந்தது.

அடுத்த வேலையாக அவர் தன்னுடைய வீட்டில் காதலை பற்றி கூறி, அந்த கார் டிரைவரையே மணமுடித்திருக்கிறார். இது தொடர்பாக `டெய்லி பாகிஸ்தான் என்ற செய்தி தளத்துக்கு பேட்டியளித்துள்ள அந்த ஜோடி தங்களது காதல் நினைவலைகளை பகிர்ந்திருக்கிறார்கள்.

அப்போது, அவர் கியரை மாற்றும் ஸ்டைல் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. காரில் கியர் போடும் போது அவரது வேகமாக செயல்படும் என அப்பெண் கூறியுள்ளார்.

மேலும் காதல் கணவருக்காக பாட்டு பாடச் சொல்லி கேட்ட போது அந்த பெண், ரிஷி கபூர், டிப்பிள் கபாடியா நடித்த பாபி படத்தில் இடம்பெற்ற ஹும் தும் ஏக் காம்ரே மேயின் என்ற பாடலை பாட, அதற்கு அப்பெண்ணின் கணவர் லைட்டா ஸ்வரம் குறையுது என கிண்டல் அடித்திருக்கிறார். இந்த காதல் தம்பதியின் பேட்டி வைரலாகி வருகிறது.


Next Story