ஹாசனில் இன்று பஞ்சரத்னா யாத்திரை


ஹாசனில் இன்று பஞ்சரத்னா யாத்திரை
x

ஹாசனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பஞ்சரத்னா யாத்திரை நடைபெற உள்ளது. ஹாசன் மாவட்டத்துக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஹாசன்-

பஞ்சரத்னா யாத்திரை

கர்நாடக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். ஜனதாதளம்(எஸ்) சார்பில் பஞ்சரத்னா யாத்திரை என்ற ெபயரில் குமாரசாமி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் குமாரசாமியின் பஞ்சரத்னா யாத்திரை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹாசன் மாவட்டம் அரிசிகெரேயில் நடக்கிறது.

ஜனதாதளம்(எஸ்) கட்சியின் கோட்டை என்றழைக்கப்படும் ஹாசன் மாவட்டத்தில் பஞ்சரத்னா யாத்திரை நடக்க உள்ளதால் ெதாண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் பஞ்சரத்னா யாத்திரைக்கு அரிசிகெரேயில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

ஹாசன் மாவட்ட வேட்பாளர்கள்

ஜனதாதளம்(எஸ்) சார்பில் 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டாலும், அக்கட்சியின் கோட்டையாக கருதப்படும் ஹாசன் மாவட்டத்துக்கு இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. மேலும், ஹாசன் தொகுதியில் போட்டியிட ரேவண்ணாவின் மனைவி பவானி ரேவண்ணா விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் குமாரசாமிக்கு அவருக்கு டிக்கெட் கொடுக்க விருப்பம் இல்லை என தெரிகிறது. இதனால் கட்சிக்குள்ளும், குடும்பத்துக்குள்ளும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அரிசிகெேர தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் சிவலிங்கேகவுடா, அக்கட்சியில் இருந்து விலக இருப்பதாகவும் தகவல்கள் ெவளியாகி உள்ளது. இதனால் ஹாசன் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அழைப்பு இல்லை

இந்த நிலையில், அரிசிகெேர தொகுதி எம்.எல்.ஏ. சிவலிங்கேகவுடா கூறுகையில், அரிசிகெரேயில் நடக்கும் பஞ்சரத்னா யாத்திரைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது பெயரையும், படத்தையும் கட்சியின் பேனரில் வைத்துள்ளனர். ஆனால் எனக்கு யாத்திரையில் கலந்துகொள்ள முறைப்படி அழைப்பு விடுக்கவில்லை. நான் அந்த யாத்திரையில் பங்கேற்க மாட்டேன். எனது ஆதரவாளர்களும் பங்கேற்க மாட்டார்கள் என்றார்.


Next Story